Monday, October 24, 2011

மழை!




ஓர் இனிமையான
திங்களில்
இளவெயில்
மாலையில்
கார்குழலின் கூந்தலில்
ஒளிந்தது
அப்பு ரூபமான
சூரியன்
இஃது
நாணத்தின் துவக்கமா?
காமத்தின் துளிர்விடமோ?
அங்கோ!
விண்ணின் மழைத்துளி!!
காமத்தின் கலை
தமிழின் வித்து
இயற்கையின் விந்து
மண்ணின் உயிர்த்துளியாய்!!!


என்றும் அன்புடன்
மோ. மனோஜ் மண்டேலா!
18 October 2009
(The glory of rain and the essence of every living being!)

Friday, September 23, 2011

நதியும் காதலும் ஒன்!


நதியும் காதலும் ஒன்!



காதல் நதி இது!
நதியின் காதலிது!

எரிகுளமாகி நதியோடி அன்பாய்
ஏறி மணமாகி தமிழோடி பண்பாய்
கலைகாக்க கரையடங்கி விளையாடி
நதியும் காதலும் ஒன்!

கடலாடி கடலோடி கூத்தாடி- அன்பிற்
உறவாடி உணர்வோடி கொண்டாடி- மாண்பிற்
நதியோடு விளையாடும் இலங்குயிளிரண்டும்
நதியுர் காதல் புகும்!

கலைவளர்க களையெடுக்க நதி வாழி!
தமிழ்வளர்க்க எழிளெடுக்க காதல் வாழி!
நாகரீக நதியோடி மக்கள் கூடிட
காதலுள் நதி புகும்!

சங்கம் வளர்த்து தமிழ்போற்றிய பாண்டியனும்
சுங்கமமைத்து பொருள் சேர்த்த சோழனும்
பாரளந்த திருமாலும் மருமாலும் சூழ்ந்த
காதல் வசம் பாடி!

முன்னே வந்தாள் செல்வ மங்கை
பின்னவளோ ஈசனின் நதி கங்கை
மாலின் இதய ஜாடையானாள்- சிவனோ
ஏற்றான் தலை ஜடையில்!

பரமன் காதல் மோகம் கோதை
அவள் மலர் மாலை போதை
அதை நிதம் போதி- செய்து
எழுக தினமும் காலை!

சித்திரம்பல கண்டு எழிலுற்ற சேரனும்
நித்திரம் மறந்து தவித்தது காதலில்
இதனின் போர் சூழ்ந்த மோதலில்
தேவரும் இதன் விளைவில்!

ஜீவநதியோடிய இயற்கை சொல்லும் புவியியல்
மனிதநெறி செய் சேர்க்கை அறிவியல்
எழில் கூடிட தமிழ் பெருகிட
நதியும் காதலும் ஒன்!

காதல் என்றின் நதியும் கூடும்
வாழு ஏரின் நிதியும் பெருகும்
கலாநதி அருள்நதி தயாநதி என்றும்
ஜெயாநதி உதயாநதி கருணாநதி!!!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா
13 September 2011


(This is an form of expressing a view of its kind termed in tamil as Silaedai (சிலேடை) coupled with the grammar of Venba. This particular couplet consists of 9 stages of explaining the same with an imaginative comparison of love to the waters. The due thanks credits to Krishnakumar Ganesan for motivating to script of this form)





Monday, September 19, 2011

ஞாபகம்.




விளையாடல் வினையில் முடியலாம்
தொலைதூரம் சென்ற பொழுதும்
தொலைத்திட்ட நிமிடங்கள்
எண்ணி வருடும் நாட்கள் பல!

ஏன் என்று நினைவு கொள்ள
காரணங்கள் பல உண்டு
என்றோ! ஓர் தினம்
ஓர் தருணம்!
தமிழ் வருடும் சமயம்!
தீட்டிய காவியம் மேய்க்கும் தருணம்
ஜன்னலின் கம்பிகளின் ஓரம்
மழைத்துளி முதுச்சரமாய்
கார்மேகம் சூழும் மேகம்
கதிரவனை அணைக்கும் தேகம்
மழைசாரல் முகத்தில் விழ
நினைவுகள் சிக்கிய நிமிடங்களை
நினைத்து- விழிகளின் ஓரம்
கண்ணீர் துளிகள்
நெஞ்சில் நின்றவனை செப்பிட
அத்துளிகளோ! முத்துச்சரமாய்!
நினைவுகளின் சாராம்சமாய்
நினைவுகள் அலைமோத
என்றும் ஞாபக அலைகள்
நினைவு  கடலில் அமுதமாய்
என்றும் நீங்கா வண்ணம்
அமைந்திட!
நினைவுகள் பசுமரத்தாணியாய்
என்றும் நெஞ்சில்
நெய் சேர்த்த பாற்சோறாய்
அமைந்திடுக!!!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா!


(Date Unknown 2009)


[The whole script depicts the loneliness of a adorable girl in miss of her guy back home. Though they are apart, the memories rock them to lead the live and to stay in touch]





Monday, September 5, 2011

அரங்கநாதன்! அர்த்தநாதன்!! ஜீவநதி!!!



 

அவள் கவிதையா?
அன்றி ஓவியமா?
அவள்- வண்ணங்களால் எழுதிய கவிதை!
வார்த்தைகளால் தழுவிய ஓவியம்!

உதிக்கின்ற செங்கதிறாள்
முகம் கொண்டாள்
செங்கதிரின் பாங்காய்
கன்னங்கள் கொண்டாள்!

கம்பனின் தமிழால்
கார் குழலினாள்
வெண்பிறை மதியாய்
புன்னைகையுடையாள் !

கோவை பழமொத்த
இதழ் கொண்டாள்!
பூவிதழிலினும் மென்மையினாள்
அழகிய எழிளினாள்!

ஓடிவரும் நீரலையில் துள்ளிவரும்
மீன்போற் தன் குட்டிகளை பாலூட்டி
காத்திடும் மீனாள்!
விழி ஒளியாள்!

அரவணை விரித்து
பாற்கடலில் துயிலெழும்
மாலின் பாற்
வெண்சங்காய் கண்டமுடையோள்!

வீசிவரும் மென்காற்று
நீரின்மேல் கொண்டாற்போல்
சுவாசம் கொண்டாள்!- அந்த
நீரின் அலைபோல்- இடையினாள்!

திருமகள் பாற் மனம் கொண்டாள்!
அள்ளி அருளிடும் கரம் கொண்டாள்!
மலைமகளின் நெஞ்சமாய் நின்றாள்!
வெண்தாமரை ஒளியாய் சுடர்வீசிட
கலைமகளின் திறன் கொண்டாள்!
முக்குலத்தோர் வாழ்த்திட பணிந்தாள்!
முத்தமிழ் கலையனைத்தும் கற்றாள்!
மும்மூர்த்தியரும் அருளிட வந்தாள்!

சேரனின் கொடியை புருவங்கள் தாங்கிட!
சோழனின் கொடியை நெஞ்சம் நினைவூட்டிட!
கலைநயம் பொங்கி- சங்கச்செந்தமிழ்  மலர
பாண்டியன் கொடியை விழிகள் பொலிந்திட!

வந்தாள்- ஒரு மங்கை!
அரூவமாக!
அவள் நேரில் வருவாள்?!
உரூவமாக!

அந்த நாள்
இருமணம் இனையும்
மணநாள்!
அவளோடு பகிர்ந்திடுவேன்
உடற் பாகத்தினை!
கொடுத்திட்டேன்
இடப்பாகத்தினை!
இது அரங்கநாதனின்
பள்ளியல்ல- பற்றோடு
வரும் கலை!

இது நடந்தின்-
நான்: அர்த்தநாதன்!
அவள்
வற்றாத  ஜீவநதி!!!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா!

28 January 2011

 



(The art of sharing love leading to, sharing the whole life and dedicating the half towards it. The depiction graded with reference to the form of Arthanareeswarar, a form of 50 Shiva and 50 Shakthi, and the Jeeva nathi)

Saturday, September 3, 2011

விதையின் விலை!




தென்னவன் தேரது
தேர்குதிரைகளுடன் திரண்டுவர!
தென்றல் இளங்காற்றில்
மேகங்கள் அழுதோட!

தெளிந்த வானத்தில்
தென்னங்கீற்றாய்!
தேங்காய்சில் போல் மதியது
தவிழ்ந்திட- துயில்
கொண்டான் கொற்றவன்!
தமிழ் பாடும் தலைவன்!!
தமிழன்னையின் புகழ்  மைந்தன்!!!
வீரன்- விவேகன்!

மூன்றெழுத்தை  உயிரில் கொண்டோன்
தமிழுக்கு மூன்றெழுத்து
தமிழின் 'வாழ்வு'க்கு மூன்றெழுத்து
சொல்லாம் 'அகம்', 'புறம்' மூன்றெழுத்து
சொல்லின் 'பொருள்' மூன்றெழுத்து
தமிழின் பொருள் பரபிரம்மம் 'முருகு' மூன்றெழுத்து!!!

பிரம்மத்தின் 'பாசம்' மூன்றெழுத்து
பாசத்தின் அடைமொழி 'நட்பு' மூன்றெழுத்து
மோகம் கொண்ட 'காதல்' மூன்றெழுத்து
காதலார் கொண்ட 'காமம்' மூன்றெழுத்து!!!

பேரெடுத்த 'பிள்ளை' மூன்றெழுத்து
பிள்ளைபார் 'மழலை' மூன்றெழுத்து
இவையனைத்தும் காக்கும் தம்
'பெயர்உம்  மூன்றெழுத்து!!!

நாயகன் அவன் சிந்தையுள்
என்னொரு நினைவோட்டமோ?
நட்பால் ஏற்பட்ட தேற்றமோ-
அதன் தோற்றமோ?

சிம்மத்தின் சினம் கொண்ட கண்கள்
போல் உள்ள ஒலி தீபத்தில்
ஆழிமுக்கடலின் ஓர் துளி போல்
விழிகளில் வழிந்தோடியது- விழிநீர்!!

இதற்கு விலைதான் என்ன?!
விதைத்த விதைதான் என்ன?!
விலையின் விதை!
விதையின் விலை!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா!

04 November 2010


(The words of loneliness and the expression of Missing you)

இயற்கையை பேணுக!




தூய்மையின் உறைவிடம்
தாய்மையின் பிறப்பிடம்- இயற்கை!

கருமை சூழுந்த மலையின் முகட்டில்
வெண்மை மனம் கொண்ட பிள்ளைகளின் ஊர்வலம்- உலா!

இனிமை கொண்ட தமிழ் மனதில்
தனி 'மை' கொண்ட அனுபவங்கள் - நிகழ்வுகள்!

தனிமை சூழ்ந்து வந்த என்னை
இனிமை கொள்ள வெய்த பட்டாம்பூச்சிகள் !

எளிமை கொண்டு எழுதிடுவேன்
உரிமையின் பால் உரைத்திடுவேன்-
"இயற்கையை பேணுக!
செயற்கையை அர!!"

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா!
30 July 2011



(Written in the journey to Varadhapalyam, also called Thada falls, overwhelmed by the welcome of Mother Nature and the serene beauty. The ambience ignited the flow of Tamizh and an small offering to Nature with a message “save nature”)

Friday, September 2, 2011

My First poem: 'நீ' யார்?


'நீ' யார்?

பாலைவனத்தில் பூத்த ரோஜா நீ!
நெய்தல் நிலத்தில் கூவும் குயில் நீ!
காலை நேர வெண்மதி நீ!
மாலைபொழுதின் கார்முகில் நீ!

கவிஞர்களின் நாவில் வாழும் தமிழ் நீ!
ஆடற்கலையின் மாடரிசி நீ!
காப்பியங்களின் காவியம் நீ!
செம்மொழிதன் வெகுமதி நீ!

இலக்கணங்களில் இலக்கியம் நீ!
இலக்கியத்தின் இலக்கணம் நீ!
என்னுள்  பூத்த கவிதை நீ!

'நீ' யார்?!


என்றும் அன்புடன்!
மோ. மனோஜ் மண்டேலா

This is my First lyrics penned in the year 2002.


(This ‘nee’ is still a ? mark, not yet found the ! yet!!!)