Thursday, September 1, 2011

தமிழ் சக்தி வாழ்த்து!!!


தமிழ் சக்தி வாழ்த்து!!!


இளவெயில் காலையில்
தாமரை குளக்கரையில்
இலைகள் தன்பணி மாற்றிட!
உதிக்கின்ற செங்கதிரோன் நிறத்தாள்!
அழகிய முகத்தாள்!
கரியோனின் இளையவள்
கரிகண்டனின் இடையவள்
கரிமுகனின் தாயவள்
கரிகாலனின் அன்னையவள்!
சக்தி வடிவானவள்
அகத்தியனை ஈன்றவள்
ஒளியானவள்
ஒளியாகி ஒலியானவள்
ஒலியாகி மொழியானவள்
மொழியாகி தமிழானவள்
தமிழாகி செம்மொழியானவள்
செம்மொழியாகி எழிலானவள்
எழிலாகி அழகானவள்
அழகாகி அன்னையானவள்
அவள் பூமி  மனையில்
அவள் தன் துணையில்
அவளை நாடினேன் அருளுள்
அன்னை வந்தாள்
அருள் தந்தாள்
அழகுள்
எழிளுள்!
மொழியுள்
செம்மொழியுள்!
ஒலியுள்
ஒளியுள்!!
தமிழுளுள் !!!
தமிழாகி என்னுள்!!!

என்றும் அன்புடன்!
மோ. மனோஜ் மண்டேலா

No comments:

Post a Comment